/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
5 ஆண்டுகளில் நாணய பயன்பாடு குறையும்
/
5 ஆண்டுகளில் நாணய பயன்பாடு குறையும்
ADDED : ஏப் 21, 2025 06:19 AM
மதுரை: 'ஐந்தாண்டுகளில் நாணயங்களின் பயன்பாடு குறையும்' என தபால், நாணயங்கள் சேகரிப்போர் சங்க கருத்தரங்கில் தெரிவித்தனர்.
மதுரை தபால், நாணயங்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் சண்முகலால் வரவேற்றார்.
இதில் தலைவர் சாமியப்பன் பேசியதாவது: தபால்கள், நாணயங்கள் சேகரிக்கும்போது பயன்படுத்தும் புத்தகங்கள், கவர்கள் மிக முக்கியமானவை. நீண்ட நாட்கள் பயன்தரக் கூடியவையில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். இல்லையெனில் தபால்கள் அழிந்துவிட வாய்ப்பு உண்டு. தாய்லாந்து, மலேசியா நாடுகளின் தபால்களில் பல குறிப்புகள் உள்ளன.
நாம் சாதாரணமாக அவற்றை பார்ப்பதை விடுத்து ஆராய்ந்து பார்த்தால் பல தகவல்கள் கிடைக்கும். இந்திய தபால் துறை சார்பில் 2024ல் 55 தபால்தலைகளை வெளியிட்டுள்ளனர்'என்றார்.
மாதவன் 'ஒரு ரூபாய் நாணயம் கடந்து வந்த பாதை'எனும் தலைப்பில் பேசுகையில், ஆரம்ப காலத்தில் தங்கம், வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. தற்போது குறைந்த எடையுடன் வருகின்றன. டிஜிட்டல் காலத்தில் நாணயங்கள் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 1, 5 நாணயங்கள் காணாமல் போய்விடும். கிடைக்கும்போதே சேகரித்து கொள்ளுங்கள். அதன் மதிப்பு அதிகரிக்கும்'என்றார். உறுப்பினர் காதர் ஹூசைன் நன்றி கூறினார். மாணவ உறுப்பினர் விக்ரதன், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

