தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாமரத்தை கவாத்து செய்யணும்

 மாமரத்தை கவாத்து செய்யணும்

 மாமரத்தை கவாத்து செய்யணும்


ADDED : ஆக 23, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''தரமான பழங்களுடன் அதிக மகசூல் பெற மா மரத்தை கவாத்து செய்ய வேண்டும்'' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அருள்மணி தெரிவித்தார்.

மா மரத்தின் ரகம், தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து, நீர்மேலாண்மை, மண்வளம், பராமரிப்பு காரணிகளைப் பொறுத்து விளைச்சல் மாறுபடும். மா சாகுபடியில் உயர் விளைச்சல் பெற கவாத்து செய்வது அவசியம்.

மரத்தில் காணப்படும் நோய், பூச்சி தாக்கிய கிளைகள், குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்த கிளைகள், முறுக்கிப் பிணைந்த கிளைகள், அடிமட்டத்தில் உள்ள தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்துவதே கவாத்து செய்வதன் நோக்கம். இதன் மூலம் சூரியஒளி, காற்றோட்டம் மரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.

கவாத்து செய்யும் போது மாமரங்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பு தருவதுடன் எளிதாக உரமிடல், இதர பண்ணை பணிகளை செய்ய முடியும். அறுவடை முடிந்த பிறகு ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை கவாத்து மேற்கொள்ளலாம்.

கவாத்து செய்யும் போது மொத்த கிளைகளில் 25 சதவீதத்திற்கு மேல் வெட்டக்கூடாது. வெட்டப்பட்ட இடங்களில் உள்ள காயத்திற்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற மருந்தை 0.3 சதவீதம் தெளிக்க வேண்டும். போதுமான ஊட்டச்சத்துகள், தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும்.

கவாத்து செய்தபின் புதிய தளிர்கள் உருவாகி அதிகளவு பூக்கள் பூக்கும். காய் பிடிப்பு திறன் அதிகரிப்பதோடு பூச்சி, நோய் தாக்குதல் குறையும். மகசூலின் தரம், அளவு கணிசமாக அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us