தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் கிரைம் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 01, 2024 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், உசிலம்பட்டி போலீசார் மற்றும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஜோதிராஜன், டி.எஸ்.பி., விஜயகுமார், சைபர் கிரைம் டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர் தர்மர், எஸ்.ஐ., க்கள் விஜயபாஸ்கரன், சுதர்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்.பி., பேசுகையில் ''சைபர் கிரைம் போன்றவற்றால் பணம் அதிகம் திருடு போகிறது. இதற்கான விழிப்புணர்வை படித்தவர்களுக்கு மட்டுமின்றி பாமர மக்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்'' என்றார்.

டி.எஸ்.பி. கருப்பையா பேசுகையில், ''படித்தவர்களால் தான் இந்த சைபர் கிரைம் நிகழ்கிறது. மாணவர்களிடத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது வருங்காலத்தில் அவர்கள் அந்த குற்றத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகதான். சைபர் கிரைம் தொடர்பாக ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us