/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வயலுாரில் தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு
/
வயலுாரில் தேங்கும் கழிவுநீரால் பாதிப்பு
ADDED : ஆக 11, 2025 04:23 AM

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் வயலுார் மந்தை களத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கருப்புசாமி கோயில் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் 'பேவர் பிளாக்' ரோடு அமைக்கப்பட்டது.
இப்பகுதி மேடானதால் இங்குள்ள மந்தை களத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது. இதைச் சுற்றி நுாலகம், நாடக மேடை, அரசு பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீர் வாய்க்காலை விட களம் தாழ்வாக உள்ளது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் வாரக் கணக்கில் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது.
ரவி என்பவர் கூறுகையில், ''மழை நீர் தேங்கி கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி பகுதியாக மாறி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மழை நேரங்களில் அதிகளவில் தேங்கும் நீரால் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

