/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓடைப்பாலம் சேதம் பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி
/
ஓடைப்பாலம் சேதம் பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி
ஓடைப்பாலம் சேதம் பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி
ஓடைப்பாலம் சேதம் பஸ் சேவை நிறுத்தம்: கிராம மக்கள் அவதி
ADDED : அக் 22, 2025 07:50 AM

பாலமேடு: பாலமேடு அருகே லக்கம்பட்டியில் பாலம் உடைந்ததால் பஸ் வசதியின்றி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
சத்திர வெள்ளாளபட்டியில் இருந்து ராமகவுண்டம்பட்டிக்கு தினமும் பஸ்கள் பல இயக்கப்படுகின்றன. இவ்வழியாக சல்லிகோடாங்கிபட்டி, வ.புதுார், லக்கம்பட்டி கிராமங்கள், வயல்வெளி, தோட்டங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
லக்கம்பட்டியில் மஞ்சுமலை ஓடை உள்ளது. இந்த ஓடையில் கட்டப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த வாரம் பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது.
இதனை பயன்படுத்தும் வகையில், மண் ஏற்றிச்செல்லும் லாரிகள், சேதமடைந்த பகுதியில் மண்ணைக் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனர்.
தற்போது பெய்யும் தொடர் மழையால் கொட்டப்பட்ட மண் அரித்து செல்லப்பட்டது. இதனால் 4 நாட்களாக இந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது. பாலத்தை உடனே சீரமைத்து பஸ்களை இயக்க வேண்டும் என கிராம வலியுறுத்தினர்.