sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பள்ளி அருகே சேதமான தொட்டி

/

 பள்ளி அருகே சேதமான தொட்டி

 பள்ளி அருகே சேதமான தொட்டி

 பள்ளி அருகே சேதமான தொட்டி


ADDED : ஜன 07, 2026 06:47 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டியில் பாழடைந்த தொட்டியால் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.

இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் ஆன மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டி சேதமடைந்ததாலும், தண்ணீர் தேவை அதிகரித்ததாலும் வேறு இடத்தில் புதிய தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டி பயன்பாடின்றி கைவிடப்பட்டது.

தற்போது இதன் கீழ்புற அறை மது அருந்தவும், கழிப்பறையாகவும், குப்பை கொட்டவும் பயன்படுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற நிலை உள்ளது. பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் பலர், விபரீதத்தை அறியாமல் சேதமடைந்த தொட்டி அருகே விளையாடுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us