ADDED : ஏப் 15, 2026 07:45 PM

பாலமேடு: பாலமேடு பேரூராட்சி சின்ன பாலமேட்டில் புதிய குடிநீர் தொட்டி கட்டடம் விரிசல் விட்டு சேதமடைந்துள்ளது.
இக்கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்காக கட்டிய கட்டடம் தரமற்ற கட்டுமானத்தால் சேதமடைந்துள்ளது என கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சின்ன பாலமேடு சிந்தாயி, அழகர் கூறியதாவது: பயன்பாட்டில் இல்லாத தரைமட்ட குடிநீர் தொட்டி மீது இரு பிளாஸ்டிக் தொட்டிகளை வைக்கும்படி பேரூராட்சியில் கேட்டோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை மீறி சாத்தையாறு ஓடைக் கரையில் புதிதாக கட்டினர். அதன் மீது பிளாஸ்டிக் தொட்டி வைத்த சில வாரங்களிலேயே விரிசல் விட்டுவிட்டது. பின்னர் பில்லரில் இருந்து கீழ்பகுதி விலகிவிட்டது. இந்த விரிசல்களில் விஷப்பூச்சிகள் வசிக்கின்றன. தண்ணீர் பிடிக்கும் தளமும் உடைந்து சேதமடைந்துள்ளது. கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.
