தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காய்ந்த மரங்களால் அபாயம்

 காய்ந்த மரங்களால் அபாயம்

 காய்ந்த மரங்களால் அபாயம்


ADDED : மார் 02, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார், பாலமேடு மெயின் ரோட்டில் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.

இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தேவசேரி பிரிவு, எர்ரம்பட்டி, அய்யூர் பிரிவு, சுக்காம்பட்டி குறவன்குளம் பிரிவு அருகே என ரோட்டோரத்தில் இருபுறமும் ஆங்காங்கே பட்டுப்போன நிலையில் காய்ந்த மரங்கள் உள்ளன.

விழும் நிலையில் உள்ளதால் அவை வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. காற்று, மழை நேரங்களில் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுவதால் டூவீலரில் செல்வோர் தடுமாறுகின்றனர், விழுந்து காயமடைகின்றனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் இற்றுப்போன இம்மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us