தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளியில் ஆபத்து கட்டடம்

 பள்ளியில் ஆபத்து கட்டடம்

 பள்ளியில் ஆபத்து கட்டடம்


ADDED : மே 13, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா சேடப்பட்டி ஒன்றியம் பெரியகட்டளையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி நடந்து வருகிறது. தற்போது இந்த பள்ளிக்கு வேறு இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு வகுப்புகள் செயல்படுகின்றன.

பழைய கட்டடம் ஊருக்கு மத்தியில் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

இதனை இரவில் சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். பகலில் சிறுவர்கள் இதில் விளையாடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்தக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us