ADDED : மார் 15, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கர்நாடக மாநில கவர்னர் தாவார் சந்த் கெலாட் சேலத்தில் இருந்து நேற்று மாலை காரில் மதுரை வந்தார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அவரை துணை கமிஷனர் கலைவாணன் வரவேற்றார். பின்னர் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றார். இரவில் மதுரை சர்க்யூட் ஹவுஸில் தங்கினார். இன்று ராமேஸ்வரம் செல்கிறார்.

