/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இன்று துவங்குகிறது 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி: கல்வியாளர், நிபுணர்கள் ஆலோசனைகளை கேளுங்கள்

ADDED : ஏப் 08, 2023 12:04 AM
மதுரை: 'பிளஸ் 2க்கு பின் எதிர்காலம் ஜொலிக்க உயர் கல்வியில் 'என்ன படிக்கலாம்; எங்கே எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம்' என உயர்கல்வி படிப்புகள் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் இன்று (ஏப். 8) துவங்கி ஏப்.,10 வரை மூன்று நாட்கள் நடக்கின்றன.
தினமும் காலை 10:00, மாலை 4:00 மணி என இரண்டு அமர்வுகளாக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடக்கின்றன.
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கலை உள்ளிட்ட படிப்புகள் குறித்து துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள் பேசுகின்றனர்.
விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஒரே இடத்தில்
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 90க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளன.
இவை காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை இடைவேளையின்றி திறந்திருக்கும். ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் என விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை உள்ள நடைமுறைகள், கட்டண விபரம் குறித்து ஆலோசனை பெறலாம். இதன் மூலம் கல்லுாரியை தேர்வு செய்வது குறித்த மாணவர்கள், பெற்றோர் அலைவது தவிர்க்கப்படும்.
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற www.kalvimalar.com என்ற இணைய தளம் மற்றும் 91505 74441 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் 'ஹாய்' என்ற மெசேஜ் அனுப்பி பதிவு செய்யலாம்.