UPDATED : நவ 25, 2026 05:16 PM
ADDED : நவ 25, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.
சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு முன் மதுரையை சேர்ந்த ரமேஷ் ஆஜராகி முறையிட்டதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் உச்சநீதிமன்ற உத்தரவின்படியும், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் அளித்த உத்தரவாதத்தின்படியும் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். நீதிபதிகள்‛ மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும்' என்றனர்.
