/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வறட்சியால் இரைதேடி தவிக்கும் மான்கள்
/
வறட்சியால் இரைதேடி தவிக்கும் மான்கள்
ADDED : ஆக 03, 2025 05:17 AM
பேரையூர் -: பேரையூர் தாலுகா சாப்டூர் வனப்பகுதியில் அதிக அளவில் மான்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் புள்ளி மான்கள் நிலப்பகுதியில் உள்ள கண்மாய்கள், விளை நிலங்களில் தஞ்சமடைந்துள்ளன. தொடரும் வறட்சியால் பெரும்பாலான ஊருணி, கண்மாய், நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.
தண்ணீருக்காக அலைபாயும் புள்ளி மான்கள் ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் இருந்து வெளியேறி, மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
அவற்றை கிராமங்களில் திரியும் நாய்கள் விரட்டுகின்றன. புள்ளிமான்களின் வாழ்வாதாரத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தொட்டி, குட்டைகளை அமைக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

