தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அமைச்சருக்கு எதிராக அவதுாறு வழக்கு

 அமைச்சருக்கு எதிராக அவதுாறு வழக்கு

 அமைச்சருக்கு எதிராக அவதுாறு வழக்கு


ADDED : பிப் 26, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் தமிழக அமைச்சர் மனோதங்கராஜ் அவதுாறு கருத்து பதிவிட்டதாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பா.ஜ.,வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நீதிப்பாண்டியன் தாக்கல் செய்த மனு: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

இவர் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். அதில் அமெரிக்காவின் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது என சர்வதேச உண்மை கண்டறியும் குழுக்கள் உறுதி செய்துள்ளன. மக்களிடையே குழப்பம் உண்டாக்கும் வகையில் பிரதமருக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை மனோதங்கராஜ் வெளியிட்டுள்ளார். இது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்.

மனோதங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி விசாரணையை 2 வாரங் களுக்கு ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us