/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொள்முதல் நிலையம் துவங்க தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
/
கொள்முதல் நிலையம் துவங்க தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
கொள்முதல் நிலையம் துவங்க தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
கொள்முதல் நிலையம் துவங்க தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 20, 2025 05:37 AM

மேலுார்: மேலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலுார் ஒரு போக பாசன பகுதியான கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இப்பகுதியில் விளைவிக்கக்கூடிய நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை திறக்காமல் காலம் கடத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயி ஜெயராமன் கூறியதாவது:
பயிர்கள் பாதிக்கும் அபாயம்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நெல் பயிரிட்டுள்ளோம். தற்போது அறுவடை செய்ய வேண்டிய நிலையில் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்யாமல் வயலில் நெல் வீணாகி வருகிறது. காலம் கடந்து அறுவடை செய்வதால் அரிசியானது குருணையாக உடையும். மழை பெய்தால் நெல் பயிராக முளைத்து விடும்.
தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பிற பகுதிகளில் சிறிய ரக நெல் கிலோ ரூ.24.50 க்கும், பெரிய ரகம் ரூ.24.05க்கும் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் ரூ. 18 .50 என கிலோவுக்கு ரூ.6 குறைத்து வாங்குவதால் 65 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ. 400 நஷ்டம் அடைகிறோம். அதனால் விரைவாக கொள்முதல் நிலையத்தை துவங்க கலெக்டர் உத்தரவிடவேண்டும் என்றார்.