நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழா காலங்களில் தனியார் பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்குவது, தனியார்கள் மின்சார பஸ்கள் இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய சங்க துணைத் தலைவர் சிவக்குமார், கிளைத்தலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் ஆசைக்கொடி, பொருளாளர் உதயராஜ் பங்கேற்றனர்.

