/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சித்துறை மதுரையில் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை மதுரையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 05:23 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் மா.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.அமுதரசன் முன்னிலை வகித்தார். அனைத்து காலியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அவுட்சோர்ஸிங் முறையில் நிரப்புவதை கைவிட வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலைஊதியம், மருத்துவ விடுப்பு உட்பட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.
கணினி உதவியாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி மற்றும் ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் அ.பாலாஜி நன்றி கூறினார்.