ADDED : பிப் 10, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பு (அக்வாய்) சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் முகம்மது ஆதம் தலைமை வகித்தார். நிறுவனர் ராணாரபீக், மாநில பொதுச் செயலாளர் வெங்கடாஜலம், நிர்வாகிகள் நாகராஜன், ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜாஹிர்உசேன், செயலாளர் ரபீக், கணேசன் உட்பட பலர் பேசினர். மின்கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் வகையில் கணக்கீடு இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.