நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். வெள்ளலுார் மாயாண்டி கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோஷமிட்டனர். மாநில துணைதலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் கதிரேசன், இளங்கோவன், பொருளாளர் ராஜாமணி, தாலுகா தலைவர் அடக்கி வீரணன், உறுப்பினர்கள் நாராயணன், சின்னழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.