நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் த.வெ.க., அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில், மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து தலைவர் முனீஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேர்வு, வேலைவாய்ப்புகளில் முறைகேடு, பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழக முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மாணவர்கள் ரகசிய கடிதம் அனுப்பும் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

