தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூன் 29, 2026 11:09 PM

ADDED : ஜூன் 29, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 11:09 PM ADDED : ஜூன் 29, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் மாவட்ட செயலாளர் சாமி தலைமை வகித்தார்.

மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தியதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக நிறைவேற்றியுள்ள நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.

மத்திய அரசின் வி.பி.ஜி.ராம்.ஜி என்ற புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். மாநில அரசு அனைத்து மாநகராட்சிகளிலும் துாய்மை பணியை தனியாருக்கு வழங்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், நிர்வாகிகள் ராமசாமி, ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us