ADDED : ஜூலை 09, 2026 12:03 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சந்திரபாண்டி, மகேந்திரன், மனோகரன், இணைச் செயலாளர்கள் பெரியகருப்பன், ராம்குமார், சுஜாதா முன்னிலை வகித்தனர். அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர்.
புதிய காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத மகன், மகள், கணவரை இழந்த மகளையும் இதில் சேர்க்க வேண்டும். கட்டணமில்லா சிகிச்சையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அதிகபட்ச வரம்பு கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
