ADDED : ஆக 17, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மதுரை கிழக்கு வட்டார தென்னை விவசாயிகளுக்கு தென்னை டானிக் உபயோகம் குறித்த செயல் விளக்கம் சக்கிமங்கலத்தில் நடந்தது.
வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் செல்வராணி தென்னை மரத்துக்கு வேர் மூலம் டானிக் செலுத்தும் முறை குறித்தும், குரும்பை கொட்டுவதை தடுத்து மகசூல் அதிகரிப்பது குறித்தும் விளக்கினார். பயிற்சி மாணவர் ரவி ராஜா, தொழில்நுட்ப உதவியாளர் மாரிமுத்து ஏற்பாடு செய்தனர்.
