ADDED : ஆக 25, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பராமரிப்பு தொகையை பிற மாநிலங்களைப் போல உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் பராமரிப்பு உதவித் தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துராணி, மாவட்ட குழு ஜீவானந்தம், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், சின்னசாமி, பழனியம்மாள் பங்கேற்றனர்.
