UPDATED : அக் 07, 2026 06:34 PM
ADDED : அக் 07, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தல்லாகுளத்தில் அனைத்திந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், ஓய்வூதியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதம் ரூ.1000 மருத்துவப் படி வழங்கப்பட்டு வந்ததை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகி சீனிவாசன், பி.எஸ்.என்.எல்., டாட்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வின் சத்தியராஜ், தொலை தொடர்பு ஓய்வூதியர்கள் முற்போக்கு அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் செல்லபாண்டி, பி.டி.பி.ஏ., மாநில துணைச் செயலாளர் பர்குணன் உள்ளிட்டோர் பேசினர்.
