தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழிற்சாலைகளில் டெங்கு விழிப்புணர்வு

 தொழிற்சாலைகளில் டெங்கு விழிப்புணர்வு

 தொழிற்சாலைகளில் டெங்கு விழிப்புணர்வு


ADDED : செப் 25, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: டெங்கு பரவுவதை தவிர்க்க, தொழிற்சாலை வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என, தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்வதால், தொழிற்சாலையில் உடைந்த பிளாஸ்டிக், இரும்பு உட்பட கழிவுப் பொருட்களில் மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்க தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடர் கலந்து தொட்டியை நன்கு மூடி தொழிற்சாலை வளாகத்தை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் உடனே அதனை அகற்றி, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். கூரைகள், வடிகால்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு டெங்கு தடுப்பு, தனிநபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us