ADDED : நவ 19, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இன்று (நவ.,19) கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெற்றி வீடுகட்டும் திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு அவசர கதியில் பயனாளிகள் தேர்வு செய்யாமல் கால அவகாசம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கை குறித்து விளக்கினார். மாநில செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் அமுதரசன், ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
