ADDED : மார் 14, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் 'ஷார்ப்' அமைப்பு சார்பில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் திறன் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். தி ரைஸ் குளோபல் நிறுவனர் ஜெகத் காஸ்பர் ராஜ் முன்னிலை வகித்தார்.
ஷார்ப் அமைப்பின் தலைவர் காவேரிகனி, துணைத் தலைவர் சங்கர் கணேஷ், கூகுள் பார் ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனத்தலைவர் பால் ரவீந்திரநாத், காக்னிஸன்ட் நிர்வாகி புருஷோத்தமன், எச்.சி.எல்., டெக் இயக்குநர் திருமுருகன், சேவ் மாம் சி.இ.ஓ., செந்தில் குமார் ஆகியோர் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து பேசினர். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
