தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பாதையில்லாத பஞ்சபாண்டவர் மலை அவதிப்படுகின்றனர் பக்தர்கள்

பாதையில்லாத பஞ்சபாண்டவர் மலை அவதிப்படுகின்றனர் பக்தர்கள்

பாதையில்லாத பஞ்சபாண்டவர் மலை அவதிப்படுகின்றனர் பக்தர்கள்


ADDED : ஆக 15, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: கீழவளவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.

இம்மலை 2 முதல் 11ஆம் நுாற்றாண்டு வரை சமணர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. மலை மீது மூன்று, குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. பிராமிய கல்வெட்டுகள், கல் படிக்கட்டுகள், மலையடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளன. கீழவளவு சுற்றுவட்டார மக்கள் இங்கு திருமணம் உட்பட நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

அப்பகுதி செந்தில்குமார் கூறியதாவது:

மெயின் ரோட்டில் இருந்து மலைக்குச் செல்ல 370 மீ., துாரம் பாதை இல்லாமல் தனியார் பட்டா நிலம் வழியாக செல்கிறோம். அதனால் ரோடு அமைக்க முடியாமல் மேடு, பள்ளமாகவும் சேறும், சகதியுமாகவும் உள்ளது. இங்கு ஆராய்ச்சி நோக்கில் செல்லும் மாணவர்கள், வெளிநாட்டவர், விழா நடத்துவோர் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு அமைக்குமாறு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரு ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அளவீடு செய்ததோடு சரி ரோடு அமைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு ரோடு அமைக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us