த.வெ.க., உருவாக்கிய ‘தாராபுரம் பார்முலா’: உதயகுமார் குற்றச்சாட்டு
த.வெ.க., உருவாக்கிய ‘தாராபுரம் பார்முலா’: உதயகுமார் குற்றச்சாட்டு
UPDATED : அக் 10, 2026 07:50 PM
ADDED : அக் 10, 2026 07:46 PM
மதுரை: ‘‘ இடைத்தேர்தலில் டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து ‘தாராபுரம் பார்முலாவை’ த.வெ.க., உருவாக்கிவிட்டது,’’ என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர்., -விஜய் சந்தித்தது போல த.வெ.க., போலி வீடியோ வெளியிட்டுள்ளது. எப்போதாவது எம்.ஜி.ஆரை விஜய் சந்தித்துள்ளாரா. முதல்வரே இப்படி ஒரு ‘சீட்டிங்’ வேலையை செய்யலாமா. நான் தான் எம்.ஜி.ஆர்., என்கிறார். அவரது கால் துாசிக்கு கூட யாரும் இணையாக முடியாது. டிபன் பாக்ஸில் பணம் வைத்து கொடுத்து ‘தாராபுரம் பார்முலா’ என ஒன்றை உருவாக்கி விட்டனர். முதல்வராகும் வரை விஜயின் கால் தரையில் படவில்லை. ஆனால் இப்போது முருங்கைக்காய் பறிக்கும் நிலைக்கு ஆளானார். இடைத்தேர்லில் ஒரு ஆளுங்கட்சி இவ்வளவு குறைவான ஓட்டில் வென்றதே இல்லை. மக்களிடம் அவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது.
அ.தி.மு.க., உங்களுக்கு என்னய்யா தீங்கு செய்தது. கரூரில் 41 பேர் இறந்த விவகாரத்தில் கூட உங்களுக்கு ஆதரவாக அரசியல் நாகரீகத்தோடு பேசியவர் பழனிசாமி. அ.தி.மு.க., உங்களுக்கு என்ன துரோகம் செய்தது. அ.தி.மு.க.,வை ஏன் சுரண்டி பிழைக்கிறீர்கள். அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்த முடிவையும் பழனிசாமி எடுப்பார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எங்களுக்காக பிரசாரம் செய்யவில்லை. தி.மு.க, – அ.தி.மு.க., கூட்டணி என்று கதை சொன்னார்கள். இப்போது இரு கட்சிகளும் தனித்து தானே போட்டியிட்டன. நாங்கள் எங்கள் நிலையிலிருந்து மாறுபடவே இல்லை. இவ்வாறு கூறினார்.
