/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாழாகும் குடியிருப்புகள்; பராமரிக்குமா நீர்வளத்துறை
/
பாழாகும் குடியிருப்புகள்; பராமரிக்குமா நீர்வளத்துறை
பாழாகும் குடியிருப்புகள்; பராமரிக்குமா நீர்வளத்துறை
பாழாகும் குடியிருப்புகள்; பராமரிக்குமா நீர்வளத்துறை
ADDED : ஜன 30, 2024 07:28 AM

மேலுார் : மேலுார், தனியாமங்கலம் அலுவலக வளாகத்தினுள் உள்ள குடியிருப்புகளை பராமரிக்காததால் பாழாகி வருவதாக நீர்வளத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
புலிப்பட்டியில் துவங்கும் 12வது பெரியாறு பிரதான கால்வாய் குறிச்சிப்பட்டி கண்மாய் வரை செல்கிறது. இக் கால்வாய் மற்றும் மடைகளை பராமரிக்க தனியாமங்கலத்தில்நீர்வளத்துறை சார்பில் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு உதவி செயற்பொறியாளர் தலைமையில் அலுவலர்கள் தங்கி பணிபுரியும் வகையில் உள்ளன. ஆனால் அதிகாரிகள் இங்கு தங்குவதில்லை. குடியிருப்புகள் பாழாகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
அதிகாரிகளை சந்திக்க மேலுார் செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், உதவி செயற்பொறியாளர் 2 பகுதிகளை கவனிப்பதால், வெளியூர் செல்வதாக கூறுகின்றனர். குடியிருப்புகள் பாழாகி வருவதால் வரிப்பணம்தான் வீணாகிறது. குடியிருப்புகளில் அதிகாரிகள் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்புகளை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.