sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை - சென்னை ஆம்னி பஸ் கட்டணம் ரூ.900 : போட்டியை சமாளிக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு

/

மதுரை - சென்னை ஆம்னி பஸ் கட்டணம் ரூ.900 : போட்டியை சமாளிக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு

மதுரை - சென்னை ஆம்னி பஸ் கட்டணம் ரூ.900 : போட்டியை சமாளிக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு

மதுரை - சென்னை ஆம்னி பஸ் கட்டணம் ரூ.900 : போட்டியை சமாளிக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு


ADDED : செப் 28, 2011 12:59 AM

Google News

ADDED : செப் 28, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தீபாவளியை முன்னிட்டு, மதுரை - சென்னைக்கு ஆம்னி பஸ் கட்டணம் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.900 ('ஏசி' படுக்கை வசதி) எட்டியுள்ளது. தீபாவளி நேரத்தில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை உயரலாம். போட்டியை சமாளிக்க போக்குவரத்து கழகம் மாற்று வழிகளை தேடுகிறது.பண்டிகை காலங்களில் மதுரை - சென்னை, மதுரை - பெங்களூரு இடையே ரயில்கள், பஸ்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் 'ஊர் போய் சேர்ந்தால் போதும்' என, ஆம்னி பஸ்களில் கேட்கும் கட்டணத்தை கொடுத்து பயணிக்கும் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு அதிகபட்சமாக மதுரை - சென்னைக்கு ஆம்னி பஸ்களில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.500 வரை வசூலித்தனர். இக்கட்டணம் இந்தாண்டு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 'ஏசி' சிலீப்பர் ரூ.900: மதுரையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 70க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும், 35 அரசு பஸ்களும் இயக்கப்படுகின்றன. மதுரை - சென்னைக்கு ஆம்னி பஸ்சில் 'ஏசி' சிலீப்பர் (படுக்கை வசதி) கட்டணம் ரூ.900. மதுரை - பெங்களூருவுக்கு 'ஏசி' கட்டணம் ரூ.600 முதல் ரூ.690. மதுரை - சென்னைக்கு அரசு பஸ்சில் அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் ரூ.270. 'ஏசி' கட்டணம் ரூ.400. விரைவு போக்குவரத்து கழகத்தில் மதுரை - சென்னைக்கு ரூ.255. 'ஏசி' கட்டணம் ரூ.400. மதுரை - பெங்களூருக்கு அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் ரூ.350 என, நிர்ணயிக்கப்

பட்டுள்ளது.முன்பதிவு ஜரூர்: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஆம்னி மற்றும் அரசு பஸ்களில் ஜரூராக நடக்கிறது. ஆம்னி பஸ் நிறுவனங்களில் சிலவற்றில் ஆயுத பூஜைக்கான முன்பதிவு முடிந்துள்ளது. தீபாவளிக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க ஆம்னி பஸ் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். ஆம்னி பஸ் புக்கிங் முடிந்ததும் பயணிகள் வழக்கம்போல் அரசு பஸ்களை தேடி வருவர். நெருக்கடியை சமாளிக்க 15 பஸ்களை கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us