/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேட்பாளரை மாற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி
/
வேட்பாளரை மாற்றக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி
ADDED : செப் 28, 2011 01:03 AM
மதுரை : மதுரையில் அ.தி.மு.க., வேட்பாளரை மாற்றக்கோரி, அதிருப்தியாளர்கள்
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
முத்துப்பட்டி பகுதிக்குட்பட்ட
வார்டில், தற்போதைய அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜாசீனிவாசன் மீண்டும்
போட்டியிடுகிறார். இவருக்கு பதில் போட்டியிட, முத்துப்பட்டியைச் சேர்ந்த
ராஜேந்திரன் என்பவர் கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்திருந்தார்.
ஆனால் 'சீட்' வழங்கப்படவில்லை. இந்நிலையில், ராஜாசீனிவாசன் தனது வார்டிற்கு
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி
ராஜேந்திரன் ஆதரவாளர்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி
போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், போலீசார் அங்கு வந்ததை தொடர்ந்து, கொடிகளை
அகற்றி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.