ADDED : செப் 21, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
மேலுார்: நாவினிபட்டி- காரைக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து வயலில் உள்ள மோட்டார்களுக்கு செல்லும் மும்முனை மின் இணைப்பு தம்பிகள் தாழ்வாக சென்றன.
இதனால் பகல் மற்றும் இரவில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு செல்லும் விவசாயிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கீழையூர் மின்வாரிய ஏ.இ., ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் மின்கம்பிகள் உயர்த்தி கட்டி சரி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
