UPDATED : அக் 09, 2026 06:20 PM
ADDED : அக் 09, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
மேலுார்: திருவாதவூரில் உடைந்த குழாய் வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் ரோட்டில் வெளியேறியது. அதனால் தண்ணீர் வீணானதோடு மக்கள் அசுத்தமான நீரை பருகும் நிலை ஏற்பட்டதால் ஆரோக்கியம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
உடனே நடவடிக்கை மேற்கொண்ட காவிரி குடிநீர் துறை ஏ.இ., நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் குழாய் உடைப்பை சரி செய்தனர். இதையடுத்து தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
