ADDED : ஆக 05, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் எதிரே அங்கன்வாடி மைய வளாகத்தில் தனியார் கரி மூடைகளை அடுக்கி வைத்திருந்தனர். குழந்தைகள் மீது மூடைகள் சரிந்து விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது. கரித்துாசியால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பேரூராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து கரி மூடைகளை அகற்றினர். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.