ADDED : பிப் 04, 2024 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அமைச்சர் மூர்த்தி, எம்.பி., வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகாரானா உள்ளிட்டோர் ரூ.5 கோடியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்ட அடிக்கல் நாட்டினர். கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி, பி.டி.ஓ.,க்கள் செல்லபாண்டியன், ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.