ADDED : ஆக 25, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மின்விளக்கு, 90 தரை கடைகள், கழிப்பறை மின்மோட்டாருக்கு உரிய 10 மாத மின் கட்டணத்தை ஒப்பந்ததாரர் செலுத்தாததால் 3 நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் மக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதியுற்றனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக உடனே நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டின் பேரில் மின்கட்டணம் செலுத்தப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.