UPDATED : நவ 17, 2026 07:01 PM
ADDED : நவ 17, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் 5 நாட்களாக செப்டி டேங்க் நிரம்பி கழிவுநீர் வெளியேறியது. துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக இருந்ததால் உள் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து மருத்துவமனை சி.எம்.ஓ., கலாமணி ஏற்பாட்டின் பேரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யப்பட்டது. கழிவுநீர் வெளியேறுவது நின்றதால் நோயாளிகள் நிம்மதி அடைந்தனர். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
