ADDED : டிச 19, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இ. மலம்பட்டியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கல்அறுந்தான் கண்மாய் உள்ளது. இக் கண்மாய்கரை போதிய பராமரிப்பின்றி கரை உடைந்து தண்ணீர் பயிர்கள் மற்றும் அரசு பள்ளிக்குள் சென்றது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக விவசாயிகள் மற்றும் நீர்வளதுறையினர் இணைந்து கரை உடைப்பை சரி செய்தனர்.