ADDED : ஜூன் 28, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி 7 மாதங்களாக நடக்கிறது. சந்திப்பு மையங்களில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்கள் மேடு பள்ளமாக, ஜல்லிக்கற்களுடன் காணப்பட்டதால் ரோடு சந்திப்புகளில் குறிப்பாக அழகர் கோவில் ரோட்டில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் சந்திப்பு மையங்களை சிமென்ட் கான்கிரீட் கலவையால் பள்ளத்தை சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.