ADDED : அக் 21, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் மில்கேட்டில் ரூ. 1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடித்து திறப்பு விழா நடந்தபின்பும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக் கிடந்தது.
அதனால் மக்கள் 3 கி.மீ., துாரத்தில் உள்ள சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து, தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.