ADDED : மார் 25, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கிடாரிப்பட்டி, மேலத் தோப்பில் சுகாதார வளாகம் கட்டி மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் ஆழ்குழாய், மின் சப்ளை வழங்கவில்லை. மக்கள் அழகர் கோவில் செல்லும் ரோட்டை கழிப்பிடமாக பயன்படுத்தினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இ
து குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். மகிழ்ச்சி அடைந்த மக்கள், அதிகாரிகள், தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
