ADDED : நவ 22, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 53 நாட்களாகியும் பூதமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை.
அதனால் விவசாயத்திற்கு தண்ணீரின்றி நிலங்கள் தரிசாகும் அவலம் நிலவியது. அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பூதமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.