ADDED : பிப் 04, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருநகரின் மையப் பகுதியிலுள்ள  அண்ணா பூங்காவை சுற்றி அமைக்கப்பட்ட நடைமேடையில் தினமும் காலை, மாலையில் 500க்கும் மேற்பட்டோர் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த நடைமேடை 10  ஆண்டுகளுக்கும் மேலாக  முழுவதும் சேதமடைந்திருந்தது.
குழந்தைகள், முதியோர், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சிரமம் அடைகின்றனர்.
பலர் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நடைமேடையை  சீரமைக்கும் பணி துவங்கியது.

