ADDED : ஆக 30, 2026 08:01 PM
மதுரை: திருவாதவூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், உணவு அருந்தும் கூடம் திறந்து வைக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜமாணிக்கம் கூடத்தை திறந்து வைத்தார். தெற்கு மண்டல சில்லரை விற்பனை தலைவர் நிதின் செலுகர்,சில்லரை விற்பனை பிரிவு மேலாளர் பரமேஸ்வரன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டத்தில் இது செயல்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.13.36 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. நிதின் செலுகர் பேசுகையில், ‘‘பி.பி.சி.எல்., நிறுவனம் கடந்தாண்டு சமூக வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.261 கோடி பணிகளை மேற்கொண்டது’’ என்றார்.
இந்த அமைப்பின் சார்பில் மதுரை வேப்படப்பில் ரூ.29.30 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. 50 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
