ADDED : செப் 29, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மதிபாரதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாலமுருகன் கோரிக்கைகள் குறித்து பேசினார். துணைத் தலைவர் செல்லம்மாள், பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர்கள் பரமசிவம், ஜெயா உட்பட பலர் பேசினர். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகை மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
