ADDED : ஆக 18, 2026 06:25 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க மறுப்பதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி, பழனியம்மாள், மா. கம்யூ., நிர்வாகிகள் ராமர், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் கட்டமாக 18 ஊராட்சிகளில் 10 ஊராட்சிகளில் இரண்டு தினங்களுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கவும், 8 ஊராட்சிகளில் அடுத்து இரண்டு வாரங்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
