ADDED : அக் 16, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தீயணைப்பு மீட்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. தாசில்தார் ராமச்சந்திரன், துணைத் தாசில்தார்கள்
புவனேஸ்வரி, மவுண்ட்பேட்டன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் வீரர்கள் மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், அவற்றில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். ஆர்.ஐ.,ராமர் நன்றி கூறினார்.