/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொங்கர் புளியங்குளத்தில் பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் கண்டுபிடிப்பு
/
கொங்கர் புளியங்குளத்தில் பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கொங்கர் புளியங்குளத்தில் பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கொங்கர் புளியங்குளத்தில் பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 04, 2025 05:17 AM

மதுரை: மதுரையைச் சேர்ந்த தமிழ்மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா தலைமையிலான குழு கொங்கர் புளியங்குளம் அருகே இருக்கும் மலையில் ஆய்வு செய்தனர்.
அவர் கூறியதாவது:
ஆசிரியர் விவேக், மாணவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தேன். 30க்கும் அதிகமான படுக்கைகளுடன் 2ம் நுாற்றாண்டை சேர்ந்த 3 வணிக கல்வெட்டுகள் உள்ளன. அவை அங்கு படுக்கை செய்து கொடுத்தவர்களின் பெயர் மற்றும் அதற்கான பொன்னின் அளவைக் குறிக்கின்றன. மலையில் இடதுபுறம் 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஒரு மகாவீரர் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது.
மலைக்கு கீழே இடதுபுறம் ஒரு சிறு குகை போன்ற அமைப்பின் உள்ளே ஒரு குடையுடன் 2 பெண் சீடர்கள் சாமரம் வீச 20 செ.மீ., உயரத்தில், ௧௫ செ.மீ., அகலத்தில் ஒரு தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடையுடன் இருப்பதால் அது தீர்த்தங்கரர் என்றே எடுத்துகொள்ள வேண்டும். அது ஊர் மக்களால் வழிபட்டதால் எண்ணெய் கறை அதன் மீது படர்ந்துள்ளது. மேலும் அதன் அருகில் பெரிய மற்றும் சிறிய 2 வணிகர்களின் புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது.
முதலாமவர் துறவியர்களை வணங்குவதாகவும், மற்றொருவர் கையில் ஒரு கலசம் (மண்பானை) இருப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளது. அந்த கலசம் அங்கு படுக்கை செய்ய கொடுக்கப்பட்ட பொன்னின் அளவைக் குறிக்கிறது. அதையே மலையின் மீது உள்ள கல்வெட்டும் உறுதி செய்கிறது.
பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் தீர்த்தங்கரர் அருகில் இருப்பது இதுவே முதல் முறை. அந்த இடத்தை சுற்றி பல்வேறு தொல்லியல் தடயங்கள் விரவிக் கிடக்கின்றன. அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

